கொரான தொற்று தமிழம் முழுமையும் அதிக அளவில் பரவி இறப்புக்கள் என்னிக்கை கூடிவருகிறது. கொரான தொற்று பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக, மனிதர்களிடையே சமூக இடைவெளி , முக கவசம் அணிதல், தேவையின்றி சுற்றி திரிதலை தடுக்க கட்டுபாடுகள் ஆகியவற்றை தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா அதிகமாக பரவிவருதலை அடுத்து இன்று முதல் அத்தியாவசிய கடைகள் காலை ௬ மணிமுதல் காலை 10 மணி வரை என்று அரசுஅறிவித்தியிருந்தது.
ஆனால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொதுமக்கள் காய்கறிகள் , மளிகை சாமான்கள் வாங்குவதற்கும், உழவர் சந்தை, கடைவீதிகளுக்கு கார்கள் , ஆட்டோ , இருசக்கரவாகனத்தில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இதனால் கொரான தொற்று அதிகமாகி உயிர் இழப்புகள் ஏற்பட வாய்புகள் அதிகாமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு உழவர்சந்தை நிர்வாகமும், காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுக்குமா என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது .
தமிழக அரசு மக்களின் நலனில் அக்கரை கொண்டு எவ்வளவு தீவிர நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் தமிழகம் தொற்றிலிருந்து முழுவதும் விடுபடமுடியும்.