கள்ளநோட்டு, கஞ்சா கடத்தல் முக்கிய கொள்ளையன் மன்னார்குடியில் கைது

Update: 2021-04-25 12:30 GMT

மன்னார்குடி காவல் நிலையம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.2000 கள்ள நோட்டினை புழக்கத்தில் விட்டு வந்த நபரும், கஞ்சா கடத்தலில் தொடர்புடையவருமான இளைஞர் ஒருவரை மன்னார்குடி யில் காவல்துறையினர் தனியார் விடுதி ஒன்றில் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள திருமக்கோட்டை மகாராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (33). இவர் மீது கஞ்சா கடத்தல், கள்ளநோட்டு மாற்றுதல் போன்ற பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் என்ற பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மன்னார்குடி காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் சோதனை நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையன் மாதவன்.

அப்போது விடுதியில் அறை ஒன்றில் தங்கியிருந்த மாதவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரது அறையை சோதனை மேற்கொண்டபோது ரூ. 2000 ரூபாய் கள்ளநோட்டு சுமார் ரூ.2 லட்சத்திற்கும் மேல் இருப்பதை கண்டுபிடித்தனர். மன்னார்குடி நகரத்தில் கடந்த சில நாட்களாக இரண்டாயிரம் ரூபாய் அதிகளவில் புழக்கத்தில் இருந்துவருவதால் கள்ளநோட்டு அச்சடிக்கும் மையமும் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் இருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறை தரப்பில் இருந்துவருவதால் காவல்துறையினர் தங்களது விசாரணையினை தீவிரப்படுத்தியுள்ளனர் .

இவரிடமிருந்து ரூ. 2லட்சம் மதிப்பிலான ரூ2000 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு பணமும் 50 கிராம் கஞ்சா மற்றும் அவர் பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனிடையே மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டு கள்ளநோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவிவருகிறது.

Tags:    

Similar News