நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சாேதனை

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை. கணக்கில் வராத ரூ.47950 பணத்தை பறிமுதல்.

Update: 2021-10-30 04:47 GMT

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்காெண்டனர்.

தீபாவளி பண்டிகைக்கு ஊராட்சி தலைவர்களிடம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பணம் கேட்டதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறைக்கு தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு தடுப்பு போலீசார் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தில் உள்ளே இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியே செல்ல முடியாதபடியும், வெளியே உள்ளவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி அலுவலகத்தை இழுத்து பூட்டி சோதனையில் ஈடுபட்டனர்.

மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வி, சித்ரா உள்ளிட்ட 10 பேர் கொண்ட அதிகாரிகள்,  ஒன்றிய ஆணையர்கள், துணை ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவல் சார்பணியாளர்கள் ஒப்பந்தகாரர்களிடமும் 6 மணி நேரத்திற்கும் மேலாக துருவித் துருவி விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் நடத்திய சோதனையில் அலுவலர்களிடமிருந்து தீபாவளி வசூலாக கணக்கில் வராத ரூ.47,950 கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் யாரும் கைது செய்யபடவில்லை. மேலும் லஞ்சஒழிப்பு தடுப்பு போலீசாரின் இத்தகைய ரெய்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News