மன்னார்குடியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ஊர்வலம்

பொன்விழா ஆண்டையொட்டி மன்னார்குடியில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றனர்.;

Update: 2021-10-17 09:41 GMT

மன்னார்குடியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.

அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி மன்னார்குடி ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.,ஜெயலிலதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

முன்னதாக தேரடி காந்தி சிலையிலிருந்து ஒன்றிய சேர்மன் மனோகரன் தலைமையில் நகர செயலாளர் ஆர்.ஜி.குமார், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்செல்வம், தமிழ்கண்ணன் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பொன் வாசுகிராம், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன், கூட்டுறவு பால்வழங்கும் சங்க தலைவர் கலியபெருமாள், முன்னாள் நகராட்சி தலைவர் சுதா, ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், வினோத், சதீஷ்குமார், இளைஞர் இளம்பெண் பாசறை ஒன்றிய செயலாளர் பருத்திக்கோட்டை ஆனந்த் மற்றும் 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.

Tags:    

Similar News