முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் வீண்
மாநில அரசு முறையான திட்டமிடாத காரணத்தினால் கொள்முதல் செய்யபட்ட 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி வீணாகிறது என மன்னார்குடியில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்பரேஷன் பொது செயலாளர் பேட்டி அளித்தார்.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்ரேஷன் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இளவரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது.
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 லட்சம் டன் நெல் அந்தந்த கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளது குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 41 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ளது.
இதை இயக்கம் செய்யாததற்கு முழு பொருப்பு திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் தான். அவரின் அலட்சிய போக்கு அவரின் மெத்தன போக்கின் காரணமாக 41 ஆயிரம் மெட்ரிக் டன் வீணாகியுள்ளது .
நெல்லிற்கு அந்த தொழிலாளர்கள் ரெக்கவரி பணம் கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டுள்ளது ஆகையால் இதற்கான முழு பொறுப்பையும் முதுநிலை மண்டல மேலாளர் ஏற்க வேண்டும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்க வேண்டும்.
தமிழக அரசு ரூ 10 ஆயிரம் கோடியை அரசாங்க வங்கியிலும், தனியார் வங்கியிலும் கடன் பெற்றுள்ளது. மத்திய அரசாங்கம் நெல் கொள்முதலுக்கான தொகையை உடனுக்கு உடன் வழங்க வேண்டும் என்பதற்காகவும் கொள்முதலில் தடை ஏற்படாத வகையில் ரூ 10 ஆயிரம் கோடியை தமிழக அரசு கடனாக பெற்றுள்ளது.
இந்த கடனுக்கான வட்டியை யார் செலுத்துவது மத்திய அரசாங்கம் கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காத காரணத்தினால் மாநில அரசு அந்த கடனை பெற்றுள்ளது .
கடந்த காலங்களில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் தான் கடன் பெறுவார்கள் தற்போது உள்ள நிர்வாக இயக்குனர் வந்த பிறகு தனியார் வங்கிகளிலும் கடன் பெறுகிறார்கள் . குறைந்த பட்சமாக 6.4 சதவீத வட்டியுடன் அந்த கடன் பெறுகிறது.
இதற்கான வட்டியை மத்திய அரசாங்கம் வழங்காது கடன் கஷ்டத்தை ஏற்படுத்தும் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மாநில அரசு முறையாக திட்டமிடாததே இதற்கான காரணம் என தெரிவித்தார்.