தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியது சாதாரண விஷயமில்லை
இது சாதாரண விஷயம் அல்ல. இந்திய வளர்ச்சி திட்டங்களை முடக்க அன்னிய நாடு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? அது ஒரு சதி
மத்திய உள்துறை அமைச்சகம், இந்த சதி குறித்து விசாரணை நடத்தி வருகிறது. The other media என்ற என்ஜிஓ அமைப்பு 3 கோடி அளவு அன்னிய பணம் பெற்று அதில் 70 சதவீதம் செலவிட்டும் உள்ளது. மேலும் எந்தெந்த நாடுகள் உதவி உள்ளன என்பது விசாரணையில் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
ஆங்கிலேயன் இந்த நாட்டில் வியாபாரம் செய்யத்தான் வந்தான். ஆனால் இங்கு இருந்த காட்டிக் கொடுக்கும் கூட்டம் உதவியுடன் இந்தியாவை அடிமைப்படுத்தி சுமார் 400 ஆண்டுகள் ஆட்சி செய்யவில்லையா? அதிலிருந்து மீள உயிர்த் தியாகம் உள்ளிட்ட பெரும் விலை கொடுக்க வேண்டி இருந்தது. அது போன்ற ஒருநிலை இனி உருவாக அனுமதிக்கக் கூடாது.
மக்கள் நல திட்டங்களை எதிர்க்கும் போராட்டங்களில் சம்மந்தம் இல்லாத பலருக்கு என்ன வேலை? சுதந்திரம் வேண்டாம் என்று தீர்மானம் போட்ட கும்பல் அவர்களுடன் இணைந்து போராடுவது ஏன்? இந்தியாவின் உள் நாட்டு விவகாரங்களில் அன்னிய தலையீடு பெருகி வருகிறது.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் sponsored விவசாய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கனடா, பிரிட்டன் போன்ற நாட்டு தலைவர்கள் குரல் கொடுத்து உள்ளார்கள். என்ஜிஓ என்ற பெயரில் அன்னிய பணம் பெற்று மத மாற்றம் நடத்தி வந்தனர். மத மாற்றம் மட்டும் அல்ல இந்திய பொருளாதாரத்தை சீர் குலைக்கும் போராட்டம் நடத்தவும் அந்த பணம் பயன்படுத்தப்படுவதாக கண்டறிந்த நிலையில், அந்த பண வரவுக்கு சில கட்டுப்பாடுகளை மத்திய பா ஜ க அரசு விதித்து விட்டது.
அதனால் மத மாற்று தொழிலில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. அந்த காரணத்துக்காக, பலர் மோடி மீது கடுப்பில் உள்ளனர். அது காரணமாக மோடி எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதே நிதர்சன உண்மை. அவர்களுடன் சீனா ஆதரவு கம்யூனிஸ்ட்கள், கொள்கை இல்லாத பலர் போன்றவர்கள் இணைந்து கொள்கிறார்கள்.இப்பொழுதே இந்த அர்பன் நக்சல் போராளிகளை இனம் கண்டு அழிக்கவில்லை என்றால் தமிழ்நாடு முன்பு இருந்த கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்பதையே ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்கள் நினைவு கூர்கின்றது.
தமிழகம் மட்டும் அல்லாது வட கிழக்கு மாநிலங்களிலும் இதேநிலை தான் நீடித்து வந்தது. அங்கு சுமார் 250 கோடி அளவுக்கு அன்னிய பண வரவு இருந்து உள்ளதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சமீபத்தில் கூறி உள்ளார். ஆளுநர் கூறுகிறார் என்றால் அதற்கு ஆதாரம் இல்லாமல் இருக்காது.
மத்திய அரசு முன்னேற்ற திட்டங்களை எதிர்த்து அரசியல் கட்சிகள் கூக்குரல் போடுவது அரசியல் லாபம் கருதி. அந்த வகையில் தான் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு மின் நிலையம், மீத்தேன் முதலியவற்றை அதிமுக ஆட்சியில் அந்த கட்சி எதிர்த்து போராட்டம் நடத்தியது.
தூத்துக்குடி, கூடங்குளம், இணையம் துறைமுகம் உள்ளிட்ட, தென் தமிழக கடற்கரை முழுவதும் சிலர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளனர். அங்கு வாழும் கடற்கரை மக்களை கோயில் மணி அடித்து கூட்டம் கூட்டி விடுவார்கள். அடுத்த கட்ட போராட்டம் என்ன என்று அங்குள்ள நபரே ஆணை இடுவார். தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதைக்கூட இப்படித் தான் முடிவு செய்வதாக கூறப்படுகிறது.இந்த பகுதி கடற்கரை மக்கள் கடல் அவர்களுக்கு சொந்தம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கலசம் கடல் நீர், சுப காரியங்களுக்காக எடுக்க வேண்டும் என்றாலும், அவர்கள் அனுமதி பெற்று தான் எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
அதனால் அவர்கள் கடற்கரையில் எந்த விதமான மக்கள் நல பணிகளையும் அனுமதிப்பது இல்லை. வாழ்வு ஆதாரம், அது இது என்று சொல்லி போராட்டம் நடத்துகிறார்கள்.அவர்கள் ஓட்டு போடும் கட்சி பிரமுகர் தான் அந்த பகுதிகளில் எம்எல்ஏ, எம்பி - பதவிக்கு வர முடியும் என்ற நிலைதான் உள்ளது. அதனால், ஓட்டு வங்கி அரசியல் செய்யும் கட்சிகள் அவர்களை பகைத்துக் கொள்ள பயப்படுகிறார்கள்.
ஸ்டெர்லைட் போராட்டம் மூலம் நாட்டின் முக்கிய காப்பர் உற்பத்தி கேந்திரம் முடக்கப்பட்டது. நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதம் இந்த ஆலை பூர்த்தி செய்து வந்து உள்ளது. இப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் மின் சாதனங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.இது போல் கூடங்குளம் அணு மின் நிலையம் முடக்கப் பட்டு இருந்தால், தினமும் 16 மணி நேரம் மின் வெட்டு இருந்த நிலை தான் நீடித்து இருக்கும்.
மக்கள் நல அரசு என்றால், ஒரு திட்டத்தை கையில் எடுக்கும் முன்னர் அதனால் நாட்டுக்கு, அந்த பகுதி மக்களுக்கு ஏற்படும் சாதக பாதகம் எல்லாம் அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். திட்ட பணிகளுக்கு கோடி கணக்கில் மக்கள் வரிப் பணத்தை செலவு செய்து விட்டு போராட்டம், சட்டம் ஒழுங்கு என்று கூறி அதை கைவிடுவது எந்த வகையில் நியாயம்? அது தான் இணையம் துறைமுக திட்டம் பணியில் நடந்து உள்ளது.
பெரிய சரக்கு கப்பல் வந்து செல்லும் வகையில் கடலுக்குள் கட்டுமான பணிகள் நடைபெறும், மேல்கரை பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்து உள்ள போதும், சிலர் செய்த தவறான பிரசாரத்தை நம்பிய அறியாமையால் மக்கள் அதை நம்பவும் செய்தார்கள்.
இந்த போராட்டத்துக்கும் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் மக்கள் வந்து கலந்து கொண்டார்கள். அந்த பகுதி MLA கள் ஒன்று இணைந்து திட்டத்துக்கு எதிராக செயல் பட்டார்கள். மத்திய அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற உறுதியுடன் உள்ள போதும், மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகிறது. சட்டம் ஒழுங்கு என்று சாக்கு போக்கு சொல்லி திட்டத்துக்கு அனுமதி மறுக்கிறது. இந்த துறைமுகம் வந்தால், அந்த பகுதி படித்த மக்களுக்கு பல ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி பெருகும். அதனால் தொழில் வளம் பெருகும். பாலைவனம் போல் இருந்த தூத்துக்குடி, துறைமுகம் வந்தபின் தான் முன்னேற்றம் கண்டது.
இந்தியாவில் இதுபோன்ற ஒரு ஆழ் கடல் துறைமுகம் இல்லை. அதனால் பெரிய சரக்கு கப்பல்கள் இங்கு வருவது இல்லை. அதனால் நாம் சரக்குகளை இலங்கை துறைமுகம் மூலம் அனுப்பும் நிலை தான் உள்ளது. அதனால் பொருள் செலவு அதிகம் ஏற்பாடுகிறது. இன்னும் பல நன்மைகள் உள்ளன. விவரிக்க இங்கு இடம் இல்லை.