தாயின் பிரிவை தாங்க முடியாத இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
தாய் தன்னை விட்டு பிரிந்து சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்ததால் மனம் உடைந்த வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
தேனி கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது27.)ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகவில்லை. இவரது தாய் ஜோதி, (55 ).கோடாங்கிபட்டியில் இருந்து தனது சொந்த ஊரான ராஜதானி சென்று குடியேற முடிவு செய்தார். தாய் அப்படி பிரிந்து சென்றால் தன்னால் தாயை பிரிந்து தனியாக வாழ முடியாது என விரக்தி அடைந்த பாண்டியன் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.