தேனி, பெரியகுளத்தில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது
பெரியகுளத்தில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.;
பெரியகுளம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி 45. இவர் பெரியகுளத்தை சேர்ந்த அம்சதீன் 35 என்பவரது ஆட்டோவில் 250 கிலோ ரேஷன் அரிசி ஏற்றி கடத்திச் சென்று கொண்டிருந்தார்.
உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெரியகுளம் - ஆண்டிபட்டி ரோடு சந்திப்பில் ஆட்டோவை சோதனையிட்டு அரிசியை கைப்பற்றினர். ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரையும் கைது செய்தனர்.