தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஒரு மாதமாக தக்காளி விலை கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Update: 2022-03-17 05:15 GMT

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தக்காளி கிலோ நுாற்றி ஐம்பது ரூபாயினை தாண்டியது. இதனால் தக்காளி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டது. மழை குறைந்ததாலும், வெயில் அதிகம் இருப்பதாலும் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகம் உள்ளது. ஆனால் விலையில்லை.

இதனால் தக்காளி விலை மொத்த மார்க்கெட்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது. சராசரியாக ஒரு கிலோ தக்காளி கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் வியாபரிகளுக்கு கமிஷன் வேறு தர வேண்டும். சில்லரை மார்க்கெட்டில் முதல்தர தக்காளி விலை கிலோ ஐந்து ரூபாய் ஆக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்ட வி வசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags:    

Similar News