தேனியில் தக்காளி விலை மீண்டும் உயர்வு
தேனி மார்க்கெட்டில்கடந்த சில நாட்களாக விலை குறைந்திருந்த தக்காளி விலை கிலோ 70 ரூபாயினை கடந்தது
தேனி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தக்காளி கிலோ 150 ரூபாயினை தாண்டியது. பின்னர் படிப்படியாக விலை குறைந்து கிலோ 10 ரூபாய்க்கு வந்தது. கடந்த சிலநாட்களாக மெல்ல அதிகரித்து வந்தது.
இன்று தேனி மார்க்கெட்டில் தக்காளி கிலோ 70 ரூபாயினை கடந்தது. வரத்து குறைவும், தேவை அதிகரிப்புமே விலை உயர்வுக்கு காரணம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதர காய்கறிகளின் விலை சீராகவே இருந்து வருகிறது. இதர காய்கறிகளின் விலை வருமாறு: (கிலோவிற்கு விலை ரூபாயில்) கத்தரிக்காய்- 30, வெண்டைக்காய்- 40, கொத்தவரை - 20, சுரைக்காய்- 10, புடலங்காய்- 20, பாகற்காய்- 40, முருங்கைக்காய்- 25, பூசணிக்காய்- 14, தேங்காய் - 28, சின்னவெங்காயம்- 20, பெல்லாரி- 20, வாழைப்பூ- 10, வாழைத்தண்டு- 10, பீட்ரூட்- 20, நுால்கோல்- 26, முள்ளங்கி- 15, முட்டைக்கோஸ்- 24, காலிபிளவர்- 25.