கஞ்சா கடத்தினால் சொத்துக்கள் பறிபோகும்: தேனி எஸ்பி எச்சரிக்கை

கஞ்சா கடத்தினாலோ, விற்றாலோ இனி சொத்துக்கள் முழுமையாக பறிபோகும் என எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே அறிவித்துள்ளார்.

Update: 2022-04-12 01:30 GMT

தேனி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சொத்து விவரங்கள், இவர்களின் உறவினர்கள் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு 9 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கஞ்சா விற்பவர்கள், உதவியாக இருப்பவர்கள், கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் மட்டும் பாயாது. அத்துடன் அவர்களி்ன சொத்துக்களும், உறவினர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News