தேனி பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் தீக்குளித்த காய்கறி வியாபாரி

குடும்பத்தகராறு காரணமாக தேனி பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் தீக்குளித்த காய்கறி வியாபாரி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்;

Update: 2021-12-19 06:45 GMT

தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் காய்கறி வியாபாரி ஒருவர் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி(48.) இவர் கோவையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வீட்டிற்கு வந்த இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த பாண்டி ,  தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் இன்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தேனி போலீசார் இவரை காப்பாற்றி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News