தேனி: லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
ஆண்டிப்பட்டியில் உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிபட்டி மயிலாடும்பாறை குமணன்தொழுவை சேர்ந்தவர் கருப்பசாமி 42. லாரி டிரைவரான இவர், சிறுநீரக கல் அடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை போதிய பலன் தரவில்லை. இதனால் மனம் உடைந்த கருப்பசாமி விஷம் குடித்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மயிலாடும்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.