தேனி அருகே வீடு புகுந்து நகை திருட்டு; போலீசார் விசாரணை
தேனி அருகே வீடு புகுந்து ஆறுபவுன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
தேனி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் மல்லிகா, 54. இவர் குடும்பத்துடன் சிவகாசியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவிற்குள் இருந்த ஆறு பவுன் எடையுள்ள நகைகளை திருடிச் சென்றனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.