சந்தேக மரணங்கள் கோர்ட் புதிய உத்தரவு
சந்தேக மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை குறித்து மதுரை ஐகோர்ட் கிளை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது
சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனை அறிக்கை நகல் மற்றும் மற்றும் வீடியோ பதிவை இறந்தவரின் குடும்பத்தினரிடன் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனை குறித்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
2020-ல் சகோதரர் ரமேஷை போலீசார் அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக மதுரை பேரையூரை சேர்ந்த சந்தோஷ் வழக்கு தொடர்ந்தார். ரமேஷ் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என சந்தோத ஐகோர்ட் கிளையில் மனு தக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஐ.ஆர்.சுவாமிநாதன் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டர். எதிர்காலத்தில் சந்தேக மரணத்தில் பிரேத பரிசோதனை செய்வது குறித்து பல்வேறு வழிமுறைகளை நீதிபதி உத்தரவுகளாக பிறப்பித்துள்ளார்.
சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும். சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனை அறிக்கை நகல் மற்றும் வீடியோ பதிவை இறந்தவரின் குடும்பத்திடம் வழங்க வேண்டும். உறவினர்கள் நீதிமன்றம் செல்வதாக தெரிவித்தால் உடலை குறைந்தபட்சம் 48 மணி நேரம் பாதுகாக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். இந்த உத்தரவின் மூலம் சந்தேக மரணங்கள் பற்றிய மர்மங்களை தெளிவாக கையாண்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு சட்ட நிபுணர்களிடையேயும் வரவேற்பினை பெற்றுள்ளது.