மனைவியிடம் தாலியை பறித்துச் சென்ற கணவன் மீது வழக்கு

தேனியில் டீக்கடையில் வைத்து தனது மனைவியின் தாலியை பறித்துச் சென்ற கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்;

Update: 2021-12-22 01:00 GMT

வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, டீக்கடையில் வைத்து தனது மனைவியின் தாலியை பறித்துச் சென்ற கணவன் மீது தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி அருகே அன்னஞ்சி வாசுகி தெருவை சேர்ந்தவர் கமலாதேவி( 22.) இவருக்கும் தேனி சங்ககோனாம்பட்டியை சேர்ந்த சதீஸ்குமார்( 34 ) என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சதீஸ்குமார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கமலாதேவி தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சதீஸ்குமாருக்கு வேறு பெண்ணிடம் தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண்ணுடன் சேர்ந்து கொண்டு தனது மனைவி கமலாதேவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கமலாதேவி தனது நிதிநிறுவனத்திற்கு பணிக்கு சென்ற நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் டீ குடிக்க அருகில் உள்ள கடைக்கு வந்துள்ளார். டீக்கடையில் தனது மனைவியுடன் தகராறு செய்த சதீஸ்குமார் தனது மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை பறித்துக் கொண்டு சென்று விட்டார். இச்சம்பவம் குறித்து கமலாதேவி, தேனி மகளிர் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., மலரம்மாள், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News