தேனி ஆட்டுக் கறியின் சுவை, இறைச்சி பிரியர்களை 200 கி.மீ, கடந்து வர வைக்கிறது

தேனி ஆட்டுக்கறியின் சுவை இறைச்சி பிரியர்களை கொடைக்கானல், மூணாறு, கொச்சியில் இருந்து பல நுாறு கி.மீ.,துாரம் பயணித்து வந்து வாங்கிச் செல்ல வைக்கிறது.;

Update: 2021-07-28 03:00 GMT

தேனி ஆட்டுக்கறி கடை

கொடைக்கானல் பொதுமக்களில் பலர் இறைச்சி வாங்க 200 கி.மீ., துாரம் பயணித்து தேனிக்கு வருகின்றனர். தேனியில் அடிக்கப்படும் ஆட்டு இறைச்சியின் சுவை அவர்களை கவர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

பொதுவாக ஆட்டு இறைச்சியில் அதிகம் சுவை கொண்டது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் வளரும் ஆடுகள் தான். சுவையில் இரண்டாவது இடத்தை பிடிப்பது தேனி வருஷநாடு மலைப்பகுதியில் வளரும் ஆடுகள். மூன்றாவது இடத்தை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் வளரும் ஆடுகள் பிடித்துள்ளன.

தேனியில் பிரியாணி கடை வைத்துள்ள வியாபாரிகள் அருப்புக்கோட்டை ஆடுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் தேனியில் பிரியாணி சாப்பிட வெளியூர், சுற்றுக்கிராமங்களில் இருந்து மக்கள் வருகின்றனர்.

அதேபோல் பல ஆட்டு இறைச்சி கடை வைத்திருப்பவர்கள் அருப்புக்கோட்டை, வருஷநாடு மலைப்பகுதிகளில் இருந்து ஆடுகள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இதனால் இந்த ஆட்டு இறைச்சியை வாங்க கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து 200 கி.மீ., துாரம் பயணித்து (வர 100 கி.மீ.,, திரும்ப செல்ல 100 கி.மீ.,) இறைச்சி வாங்கிச் செல்கின்றனர். பெரும்பாலும் கொடைக்கானலில் இருந்து காரிலேயே பயணித்து வருகின்றனர்.

அதேபோல் மூணாறு பகுதியில் வசிக்கும் மக்களும் 150மீ., துாரம் பயணித்து (வந்து செல்ல 150 கி.மீ., ) வந்து ஆட்டு இறைச்சி வாங்கிச் செல்கின்றனர்.

இதனை விட முக்கிய விஷயம் கொச்சியில் இருந்து தேனி ஆட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு ஆட்டு இறைச்சிக்கு ஆர்டர்கள் கிடைக்கும்.

கொச்சியில் இருந்து பீரீசர் வேனில் வந்து இறைச்சி வாங்கிச் செல்கின்றனர். அந்த அளவுக்கு தேனியில் அடிக்கப்படும் ஆடுகளின் இறைச்சிக்கு மவுசு உள்ளது.

பெரும்பாலும் கேரள மக்கள் தேனிக்கு ஆட்டு இறைச்சி வாங்க வரக் காரணம், கேரளா, கொடைக்கானலில் வளரும் மலை ஆடுகளின் இறைச்சி அதிக நீர் பற்றுடன் சொத, சொதவென இருக்கும். சாப்பிட்டால் சுவையும் இருக்காது. ஒரு வித கவுச்சி வாடை அடிக்கும்.

ஆனால் அருப்புக்கோட்டை, வருஷநாடு, நத்தம் பகுதி ஆடுகளின் இறைச்சிகள் நீர் சத்து இல்லாமல் கெட்டிக் கறியுடன், சிகப்பு கலரில் இருக்கும்.

சமைக்கும் போதே வாசனை ஆளை துாக்கும். சாப்பிட சுவையாகவும் இருக்கும். இறைச்சி நார்நாராகவும் இருக்காது. சாப்பிட நன்றாக இருக்கும். சாப்பிட்ட பின்னர் கைகள் கூட மணக்கும்.

தவிர கொழுப்பும் அதிகம் இருக்காது. இது போன்ற பல பிளஸ் பாயிண்ட்களே கொடைக்கானல், மூணாறு, கொச்சி பகுதி மக்கள் இறைச்சி வாங்க தேனிக்கு காரில், வேனில் தேடி வரக்காரணம் என இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News