தேனி அருகே மில் தொழிலாளி சந்தேக மரணம்: போலீஸார் விசாரணை
தேனி அருகே க.விலக்கில் தூக்கிட்டு இறந்து கிடந்த மில்தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி வரதராஜ்நகரை சேர்ந்தவர் வேல்முருகன்(31) . இவருக்கு திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேல்முருகன் க.விலக்கில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று அவரது உடல் க.விலக்கு அருகே மரத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வேல்முருகன் மனைவி தனலட்சுமி, க.விலக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.