தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் அமர கட்டட வசதி இல்லை
தேனி மாவட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பல அரசு பள்ளிகளில் மாணவர்களை அமர வைக்க, கட்டடங்கள் போதவில்லை.
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர், அதிக மாணவர்கள் சேர்க்கையால் தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் அமர போதிய அளவு கட்டடங்கள் இல்லை. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தேனி மாவட்டத்தில் மெட்ரிக் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் படித்த மாணவர்கள்,அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர்களி்ன் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
ஆனால் தற்போது பெரும் பிரச்னையாக இருப்பது, கட்டட வசதிகள் இல்லை என்பதுதான். அத்தனை மாணவர்களையும் ஒரே நேரத்தில் அமர வைத்து பாடங்கள் நடத்தும் அளவு கட்டடங்கள் இல்லை. மழை பெய்வதால் மரத்தடி வகுப்புகளும் நடத்த முடியவில்லை. பள்ளிகளில் பல கட்டங்கள் சேதமடைந்துள்ளதால் அந்த கட்டடங்களிலும் மாணவர்களை அமர வைக்க முடியவில்லை.
இந்த பிரச்னை குறித்து கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வித்துறை ஒவ்வொரு பள்ளியிலும் தேவைப்படும் புதிய கட்டட வசதிகள் குறித்து கணக்கெடுத்து அரசுக்கு பட்டியல் அனுப்பி உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.