வாக்காளர் சேர்ப்பில் கண்டிப்பும் சலுகையும் கலந்த புதிய நடைமுறை

தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் கண்டிப்பும், சலுகையும் கலந்த புதிய நடைமுறை அமலாகியுள்ளது.

Update: 2023-11-05 09:30 GMT

தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு முகாமிற்கு வந்திருந்த தேர்தல் பணியாளர்கள்.

தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த மாதம் கடைசி வாரம் இன்னும் இரண்டு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் பல புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதியதாக வாக்காளர்பட்டியல் சேர விரும்புபவர்கள் வழங்கும் விண்ணப்பத்திற்கு சீரியல் நம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மிகவும் புதிய நடைமுறை. இதன் மூலம் ஒரே நபர் பல விண்ணப்பங்களை எடுத்து, தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது யாருக்கெல்லாம் 18 வயது நிறைவடைகிறதே அவர்கள் தற்போதே விண்ணப்பிக்கலாம் என்ற புதிய நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது. அதாவது 01.01.2006க்கு முன் பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 18வயது பூர்த்தியடைந்த வாக்காளர் மட்டுமே தங்களை பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியும்.

அடுத்து வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் உள்ள ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. முகாம் தொடங்கும் இடங்களில் காலை 9.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் அட்டன்டென்ஸ் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் வாக்காளர் சேர்ப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்கள் முறையாக தங்கள் பணியில் ஈடுபடுகின்றனரா? என்பதையும் உறுதிப்படுத்த முடியும். இப்படி பல்வேறு சிறப்பான மாற்றங்களுடன் இந்த ஆண்டு வாக்காளர் சேர்ப்பு முகாம் தொடங்கி உள்ளது. 

Tags:    

Similar News