திமுகவிடம் பாஜகவின் ஐ.டி. விங் கேட்கும் கேள்விகள்..
திமுக அரசுக்கு பாஜக வின் ஐ.டி. விங்க் பல கேள்விகளை கேட்டு அதற்கு பதில் சொல்லுங்கள் என வலியுறுத்தி வருகிறது.
திமுக அரசுக்கு பாஜக வின் ஐ.டி. விங்க் பல கேள்விகளை கேட்டு அதற்கு பதில் சொல்லுங்கள் என வலியுறுத்தி வருகிறது.
அந்த கேள்விகள் விவரம்:
1. மின் கட்டணம் உயர்த்தியதோடு, ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்த அனுமதித்து சட்ட திருத்தம் கொண்டு வந்தது ஏன்?.
2. மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்ற வாக்குறுதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
3. சொத்துவரியினை அதிகரித்தது ஏன்?
4. குடிநீர் வரி உயத்தியது ஏன்?.
5. பெட்ரோல், டீசல் ரூ 5 குறைப்போம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாதது ஏன்?
6. Gas சிலிண்டர் மானியம் ரூ. 100 வழங்காதது ஏன்?
7. பழைய ஓய்வு ஊதிய திட்டம் செயல்படுத்தாதது ஏன்?
8. பால், தயிர், நெய், ஆவின் ஸ்வீட்ஸ் விலைகளை உயர்த்தியது ஏன்?
9. பொங்கலுக்கு 5000 தரணும் என சொல்லி விட்டு ஆயிரம் ரூபாய் மட்டும் தந்தது ஏன்?
10. நீட் ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கே தெரியும் என சொல்லி விட்டு எதுவும் செய்யாதது ஏன்?
11. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்காதது ஏன்?
12. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவின் பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டது குறித்து ஏன் கருத்து சொல்லவில்லை.
13. செந்தில் பாலாஜி மேல் உள்ள லஞ்ச வழக்குகள் பற்றி மீடியாக்களிடம் பேச மறுப்பது ஏன்?
14. திமுகவின் அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வந்த குற்றசாட்டில் மூல பத்திரத்தை இதுவரை காட்டவில்லை ஏன்?
15. என்ன அரசியல் நடக்கிறது? வளர்ச்சி அரசியலா, சாதி மத அரசியலா?
16. கூட்டணி கட்சிகள் மற்றும் தி.மு.க.,வினரின் ஜாதி, மத அரசியலை கண்டு கொள்ளாதது ஏன்?
இதுல ஏதாவது ஒன்றுக்காவது தி.மு.க., பதில் சொல்லுமா பார்க்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.