பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு காரணமான மொபைல் போன்
போடி அருகே மொபைல் போனில் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.;
தேனி மாவட்டம் போடி குலாளர்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் மலர்க்கொடி(வயது 37.) இவரது மகள் தாரணி,( 16. )இவர் பிளஸ் 2 படித்து வந்தார். மொபைல் போனில் அதிக நேரம் விளையாடியுள்ளார். இதன் காரணமாகவே பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார். தற்போது பிளஸ் 2 படிப்பதால் மொபைல் போனில் விளையாடக்கூடாது. கண்டிப்பாக படிக்க வேண்டும் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த தாரணி, தனது பெட்ரூமில் சேலையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.