தேனி 14வது வார்டு வேட்பாளர் நாகராஜிடம் நிலத்தடி நீரை சுத்தம் செய்ய மக்கள் காேரிக்கை
தேனி 14வது வார்டு காங்., வேட்பாளர் நாகராஜிடம் மாசுபட்ட நிலத்தடி நீரை சுத்தம் செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.;
தேனி நகராட்சி 14வது வார்டு காங்., வேட்பாளராக போட்டியிடுபவர் நாகராஜ். இப்பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு இருந்தது.
பல ஏக்கர் பரப்பில் பல ஆண்டுகளாக இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தன. இதனால் இங்கு மழை பெய்யும் போது, குப்பைகளுடன் கலந்து மக்கி, அந்த நீர் பூமிக்குள் இறங்கியது. இப்படி சென்று இப்பகுதியில் நிலத்தடி நீரே தரக்குறைவாக மாறி விட்டது. இப்பகுதியில் உள்ள அடிகுழாய்களில் இது மாசுபட்ட நீர் இதனை பயன்படுத்த வேண்டாம் என அறிவிப்புகள் கூட வைக்கப்பட்டிருந்தது. (தற்போது அடிகுழாய்களை அகற்றி விட்டனர்).
இதனால் இப்பகுதி வீடுகளில் நிலத்தடி நீருக்கு பெரும் சிக்கல் உருவாகி வந்துள்ளது. இதன் பின்னர் தான் இங்கிருந்து குப்பை கிடங்கு வீரபாண்டி அருகே தப்புக்குண்டு ரோட்டோரம் மாற்றப்பட்டது. இங்கிருந்த குப்பைகளை அகற்றும் வேலைகள் நடந்தன. இந்த பணி பாதியில் நி்ற்கிறது. இன்னும் பல ஆயிரம் டன் குப்பைகள் இங்கு கிடக்கின்றன.
இந்த குப்பைகளை முழுமையாக அகற்றி, இப்பகுதியில் மாசுபட்டு கிடக்கும் குடிநீரை சுத்தப்படுத்தி தர வேண்டும். இது மிகப்பெரிய வேலை என்பது தெரியும். ஆனால் நீங்கள் தான் செய்ய முடியும் என தேனி நகராட்சி 14வது வார்டு வேட்பாளர் நாகராஜூவிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர் நிச்சயம் செய்து தருகிறேன் எனக்கூறி வாக்குறுதி கொடுத்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.