மக்களை வஞ்சித்த தி.மு.க : போடியில் ஓ. பன்னீர்செல்வம் காட்டம்

சொத்துவரியை 150 சதவீதம் வரை உயர்த்தி மக்களை தி.மு.க., வஞ்சித்துள்ளது என போடியில் ஓ.பி.எஸ்., புகார் எழுப்பினார்.;

Update: 2022-04-04 05:15 GMT

போடியில் அ.தி.மு.க.,வினர் அமைத்திருந்த நீர்,மோர்  பந்தலை திறந்து வைத்து ஓ.பி.எஸ்., நீர்மோர் வழங்கினார்.

போடியில் அ.தி.மு.க சார்பில் நீர்மோர் பந்தல் அமைத்து, மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சையை ஓ.பி.எஸ்., தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சையதுகான், போடி நகர செயலாளர் பழனிராஜ், ஒன்றிய செயலாளர் சற்குணம் உட்பட பலர் பங்கேற்றனர்.

நீர், மோர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு ஓ.பி.எஸ்., நீர்மோர் வழங்கினார். பின்னர் பேசுகையில், 'பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., தற்போது சொத்துவரியை 150 சதவீதம் உயர்த்தி மக்களை வஞ்சித்துள்ளது' என்றார்.

Tags:    

Similar News