நேர்முக தேர்வில் அடையாளம் மறைக்கப்பட்டு புதிய நடைமுறை: டி.என்.பி.எஸ்.சி.

அரசு பணியாளர் தேர்வுக்கான நேர்முக தேர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது;

Update: 2023-09-17 15:00 GMT

பைல் படம்

அரசு பணியாளர் தேர்வுக்கான நேர்முக தேர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடர்பான நடைமுறைகள் வெளிப்படை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் விதமாக புதிய நடைமுறை பின்பற்ற உள்ளது.இதன்படி நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதார்களின் பெயர் , படம் பிறந்த தேதி உள்ளிட்ட ஆடையாளங்கள் மறைக்கப்படும்.

அதற்கு பதிலாக விண்ணப்பதாரர்களை ஏ.பி.சி.டி., முதலிய எழுத்துக்களை கொண்டு குறியீடு செய்து நேர் காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.புதிய நடைமுறையுடன் ஏற்கனவே இருந்த ரேண்டம் சப்ளிங் முறையையும் பின்பற்ற உள்ளது.இதன்மூலம் விண்ணப்பதாரர்களின் மீதான சார்புத்தன்மை ஏற்படும் வாய்ப்புக்கள் நீக்கப்படுவதுடன் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி நோக்கம்...

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதற்கு இணங்க, சுதந்திரமானதும், பாரபட்சமற்றதும் ஒழுக்க நெறியின்பாற்பட்டதும், செயல்திறன் மிக்கதும், அரசு அன்றாடம் எதிர்கொள்ளும் புதிய சவால்களைச் சந்திக்கும் திறன் கொண்டதும், பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலுமான திறன் மிக்க அரசுப் பணியாளர்களை உருவாக்கி வளர்த்திடுவதே தேர்வாணையத்தின் முதன்மையான நோக்கம்.

குறிக்கோள்... தேர்வாணையம் கீழ்க்காணும் குறிக்கோள்களைத் தன்னகத்தே கொண்டு பயணித்து வருகிறது.தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் துணை கொண்டு, மாநில குடிமைப் பணிகளுக்கான தெரிவு முறை சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்தல்.காலத்திற்கேற்ப தெரிவு முறைகளை மேம்படுத்துதல்.அரசுப் பணியாளர்களின் பணி நிலைகள் குறித்து அவ்வப்போது அரசுக்கு தக்க ஆலோசனை வழங்குதல்.அரசுப் பணியாளர்களின் நலன்களையும், நேர்மைத் திறனையும் தொடர்ந்து பாதுகாத்தல் ஆகிய குறிக்கோள்களை கொண்டு செயல்படுகிறது.

Tags:    

Similar News