கம்பம் அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவன், மனைவி மூலம் கொலை
கம்பம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த டீக்கடைக்காரரை கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகுபகவதி (வயது40.) கருப்பசாமி கோயில் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மீனாவிற்கும் இதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அழகுபகவதி கடுமையாக கண்டித்துள்ளார். மது அருந்தி விட்டு வந்து தனது மனைவியை அடித்திருக்கிறார். இத பற்றி மீனா தனது கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார். அவர் தன்னிடம் வேலை பார்க்கும் 3 பேரை நியமித்து, அழகு பகவதியை கொலை செய்துள்ளார்.
காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பாலமுருகன், சிவசக்தி, சதீஷ் ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்னர் அழகுபகவதியை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர் போதையில் மூவரும் சேர்ந்து அழகுபகவதியை தாக்கி கொலை செய்துள்ளனர். போலீசார் மூவரையும் கைது செய்தனர். கொலைக்கு காரணமான மீனாவின் கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.