உறவுத் திருமணம் சிறந்ததா? வெளி திருமணம் சிறந்ததா?
பெரும்பாலும், காதல் என்றால் அது அத்தை மகள், மாமன் மகள் என்ற குறுகிய வட்டத்திலேலே இருந்தது;
உறவுத் திருமணம் சிறந்ததா?வெளி திருமணம் சிறந்ததா? அதில் பெரும் பாலான காதல்கள், கல்யாணம் என்ற அடுத்த கட்டத்தில் முடிந்து விடும்!. பிறகு அவர்களது திருமண வாழ்க்கைகளில் கூட, பெருமளவு இப்பொழுது இருப்பது போல புரியாமை, ஈகோ, சந்தேகம் போன்ற வியாதிகள் வியாபித்திருக்கவில்லை என்பதே உண்மை!!.
அதற்குப் பிறகு தான் மருத்துவ ஆராய்ச்சிகள் விரிவடைந்து, சொந்தத்தில் கல்யாணம் செய்தால், அது பிறக்கப்போகும் குழந்தைகளைப் பாதிக்கும், என்ற அறிவியல் ஆராய்ச்சியைக் கசிய அல்ல, மிகப்பலமாக விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் அவற்றிற்கான தரவுகளை இன்று வரை எவரும், சமர்பிக்கவேயில்லை என்பது தான் உண்மை!!.
எத்தனையோ கணித, ஜோதிட, விஞ்ஞான, சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில், தேர்ந்து விளங்கிய நம் முன்னோர், அத்தை மகனை, மாமன் மகளை திருமணம் செய்யக் கூடாதென்று, எந்த ஒரு இடத்திலும் கூறவேயில்லை!!. குலசாமி வழிபாட்டிற்கும், ஒரே குலத்தில் பிறந்த, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, அங்காளி, பங்காளி,முறைகளில் திருமணம் செய்யக் கூடாதென்றும், அதே நேரத்தில், வெவ்வேறு குலசாமி வழிபாடுகளைக் கொண்ட ,மாமன், அத்தை, குடும்பங்களில் திருமணம் செய்யலாம் என்றும் விதி வகுத்து விட்டுப் போனார்கள்!! . இதையே நம் முன்னோர்கள், ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடைபிடித்து வந்தனர்; இதுதான் உண்மை!!.
இந்த நடைமுறை, இங்கே வேறு யாரையும் உள்ளே புகுந்து விடாத வகையில் பாதுகாத்தது. அதாவது காதலின் பெயரால் தேவையற்ற குழப்பங்கள் உருவாவதை தடுத்து நிறுத்தியது. ஆகவே, இங்கே காதல் திருமணங்களை அதிகப்படுத்த வேண்டும். அதன் மூலம், ஆதாயம் பெற வேண்டும் என்ற பலரின் திட்டமிட்ட சதியாகவே, இந்த சொந்தத்தில் திருமணம் செய்தால் பாதிப்பு என்ற அறிவியல்பூர்வமான வதந்தி, பரப்பப்பட்டதாக பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
அந்தக்காலத்தில் சொந்தத்தில் திருமணம் செய்த நமது முன்னோர்கள் எல்லாம் கூண், குருடு, நொண்டி, நொடமாகவா வாழ்ந்தனர்? இல்லையே... மூட நம்பிக்கைகளை ஒழிப்போம். காதல் என்ற பெயரில் நடைபெறும் நாடங்களை ஒழிப்போம். முன்னோர்களை பின்பற்றுவோம் துன்பமற்ற வாழ்க்கை வாழ்வோம்!! நன்றி: வழிப்போக்கன்!!