மக்கள் பணிகளில் ஆர்வம் மிகுந்தவர்: தேனியில் செல்வத்தை புகழ்ந்த தங்கம்

தேனி நகராட்சி 32வது வார்டு தி.மு.க., வேட்பாளர் வக்கீல் செல்வத்தின் நற்பண்புகளை எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தார் தங்க.தமிழ்செல்வன்.;

Update: 2022-02-15 03:04 GMT

தேனி முப்பத்தி இரண்டாவது வார்டு தி.மு.க., வேட்பாளர் செல்வத்திற்கு(  நடுவி்ல் இருப்பவர்) ஆதரவாக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்செல்வன் ஓட்டு சேகரித்தார். இடது ஓரம் இருப்பவர் தேனி நகர செயலாளர் பாலமுருகன்.

தேனி நகராட்சி 32வது வார்டு தி.மு.க., வேட்பாளர் வக்கீல் செல்வத்திற்கு ஆதரவாக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், தேனி நகர செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் வீதி, வீதியாக சென்று ஓட்டு சேகரித்தனர்.

அப்போது தங்க.தமிழ்செல்வன் பேசியதாவது: ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ்., இருவரும் அரசு நிர்வாகத்தில் இருந்த போது சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். மக்களுக்கு நல்லாட்சி எதையும் தரவில்லை. உள்ளாட்சி தேர்தலையே மிகவும் காலதாமதம் செய்து விட்டனர். ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு வார்டிற்கும் நல்லது செய்யனும்னா கவுன்சிலரும், சேர்மனும் அவசியம் தேவை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பித்து போய் இருந்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று முன்தினம் வந்த போது, தேனியை மாநகராட்சியாக மாற்றித்தருவாக கூறினார். அப்படி தேனி மாநகராட்சியாக மாறும் போது தேனி செல்வச்செழிப்பு மிகந்த ஊராக மாறும். தமிழ்நாட்டில் சிறந்த மாவட்டமாக தேனி மாவட்டத்தை மாற்றுவோம்.

தேனி வாரச்சந்தையை மிகவும் நவீனப்படுத்தி, தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையாக மாற்றுவோம். ஆளும் கட்சியாக தி.மு.க., இருக்கும் நிலையில், நகராட்சி சேர்மனும், கவுன்சிலர்களும் ஆளும் கட்சியாக இருந்தால் நுாறு சதவீதம் நன்மை மக்களுக்கு கிடைக்கும். போடி தொகுதியில் ஓ.பி.எஸ்., வெற்றி பெற்று விட்டார். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. நான் தான் அங்கு எம்.எல்.ஏ., போன்று செயல்பட்டு வருகிறேன். உங்கள் 32வது வார்டு வேட்பாளர் வழக்கறிஞர் செல்வம் மிகுந்த நற்குணங்களை கொண்டவர். தொண்டு உள்ளம் படைத்தவர். சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். என்னுடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது சேர்ந்துள்ள கூட்டத்தையும், நீங்கள் எழுப்பும் கரவொலியையும் பார்த்தால் நீங்கள் எங்கள் வேட்பாளர் வழக்கறிஞர் செல்வம் வென்று விட்டார் என்றே நினைக்கிறேன். நீங்கள் முழு ஆதரவு அளித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என அவர் பேசினார்.

Tags:    

Similar News