தேனியில் சோகம் - பருத்தி செடிக்கு மருந்து தெளித்த 3 பேர் 3 நாளில் பலி

தேனி மாவட்டத்தில், பாதுகாப்பற்ற முறையில் பருத்தி செடிக்கு மருந்து தெளித்த 3 பேர், 3 நாளில் பலியாகி உள்ளனர்.

Update: 2021-12-13 05:30 GMT

தேனி மாவட்டம்,  ஆண்டிபட்டி அருகே,  இரண்டு நாட்களுக்கு முன்னர் பருத்தி செடிக்கு மருந்து தெளிக்கும் போது உள்ளே சென்று மருந்தை நுகர்ந்த சிறுவன் உயிரிழந்தான். நேற்று முன்தினம், வீரபாண்டி அருகே பருத்தி செடிக்கு பாதுகாப்பற்ற முறையில் மருந்து தெளித்த பத்தொன்பது வயது நபர் உயிரிழந்தார்.

அதுபோல், நேற்று போடி கோனாம்பட்டியை  சேர்ந்த அழகர் என்ற முதியவர் (வயது அறுபது) பருத்தி செடிக்கு பாதுகாப்பற்ற முறையில் மருந்து  தெளித்து உயிரிழந்தார். எனவே பாதுகாப்பான முறையில் மருந்து தெளிப்பது குறித்தும், அதிக வீரியம் உள்ள மருந்துகளை தடை செய்வது குறித்தும் வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  விவசாயிகள் வேளாண் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News