சுற்றுலாத்துறைக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்;

Update: 2023-07-18 07:30 GMT

வைகை அணையில் செயு்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

தேனி மாவட்டம், வைகை அணை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதியினை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,  ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, எம்.எல்.ஏ.,க்கள் (பெரியகுளம்) கே.எஸ்.சரவணக்குமார், (ஆண்டிபட்டி) ஆ. மகாராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு துறையையும் மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள தங்கும் விடுதிகளை மேம்படுத்துவது குறித்து தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி வைகை அணை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆய்வு செய்யப்பட்டது.

இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் முன்னிலையில், உள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சுற்றுலாத்துறை மக்களின் அத்தியாயத் தேவையாக இன்றைய காலகட்டத்தில் மாறியுள்ளது. வேலைப்பழுவின் காரணமாக மன அமைதிக்கு ஓய்வு எடுக்கவும் மறுபடியும் ஊக்கத்துடன் பணிகளை மேற்கொள்ளவும் சுற்றுலா உதவுகிறது.

ஏழை முதல் பணக்காரர்கள் வரை மன அழுத்தத்தை போக்க சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது கொரோனா காலத்தில் சுற்றுலாத்துறை முடக்கி இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது மீண்டும் சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்படுத்த தொடங்கியுள்ளது.

சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக சாத்திக்கூறுகள் உள்ள சுற்றுலாத் தளங்களில் புதிய படகு சவாரிகளை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.

இந்த ஆய்வின் போது பெரியகுளம் கோட்டாட்சியர் முத்து மாதவன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூக்கையா, லட்சுமணன், தேனி அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல் , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News