கம்பம் அருகே கஞ்சா கடத்திய கணவன்- மனைவி கைது

கம்பம் அருகே, கஞ்சா கடத்திச் சென்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-11 02:00 GMT

தேனி மாவட்டம், கம்பம் பகுதி மின்வாரிய அலுவலக தெருவில் வசிப்பவர்கள் ஈஸ்வரன், அவரது மனைவி சிலம்பரசி. கம்பம் ஏகலுாத்து பகுதியில் இருந்து இவர்கள் கேரளாவிற்கு கஞ்சா கடத்தி சென்றனர். போலீசார் சோதனை செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ இருநுாறு கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். இவர்கள் மீது இதற்கு முன்னர் பல கஞ்சா கடத்தல் வழக்குகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News