தேனி அருகே திருமணம் ஆகாத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

தேனி அருகே திருமணம் ஆகாத விரக்தியில் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-01 10:26 GMT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பை கருக்கோடையை சேர்ந்தவர் சரவணன் (வயது30.)  எம்.சி.ஏ., பட்டதாரியான இவர், பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் பெண் தேடியும் பெண் அமையவில்லை. இதனால் மனம் உடைந்த சரவணன் விஷம் குடித்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News