போடி அருகே மனைவி இறந்த தனிமையால் முதியவர் தற்கொலை

போடி அருகே மனைவி இறந்த தனிமையில் வாடிய முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-12 05:17 GMT

தேனி மாவட்டம் போடி தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் சிங்கன் (வயது 78.) இவரது மனைவி இறந்து விட்டார். மனைவி இறந்த துக்கத்தில் தனிமையில் வாழ்ந்த சிங்கனுக்கு உடல் நலனும் பாதிக்கப்பட்டது. கவனிக்கவும் ஆள் இல்லை. இதனால் மனம் உடைந்த சிங்கன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி டவுன் போலீசார்இதுகுறித்து ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News