இரவு நேரங்களில் பஸ்வசதி இல்லை: பெரியகுளம் மக்கள் அவதி
பெரியகுளத்தில் இருந்து இரவு நேரங்களில் கிராமப்பகுதிகளுக்கு டவுன் பஸ், மொபசல் பஸ் வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.;
பெரியகுளத்தை சுற்றிலும் நுாற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இவர்கள் தங்களின் ஒட்டுமொத்த வாழ்வியல் ஆதாரத்திற்கும் பெரியகுளத்தையே நம்பி உள்ளனர். இதனால் எந்த நேரமும் பெரியகுளத்திற்கு வந்து செல்வார்கள்.
பெரியகுளத்தில் இருந்து இரவு ஏழு மணிக்கு மேல் கிராமப்பகுதிகளுக்கு பஸ் வசதிகள் இல்லை. இதனால் கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கிராமப்பகுதிகளுக்கு தேவையான பஸ்வசதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.