காங்., வேட்பாளர் நாகராஜூக்கு ஆதரவாக மாவட்ட தலைமை நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பு

தேனி நகராட்சி 14வது வார்டு காங்., வேட்பாளர் நாகராஜூக்கு ஆதரவாக மாவட்ட தலைமை நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.;

Update: 2022-02-11 05:39 GMT

காங்., வேட்பாளர் நாகராஜூக்கு மாவட்ட வர்த்தக காங்., தலைவர் சங்கரநாராயணன் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தார்.

தேனி நகராட்சி 14வது வார்டில் காங்., வேட்பாளராக நாகராஜ் களம் இறங்கி உள்ளார். இதற்கு முன்பு இவரது குடும்பத்தினர் தொடர்ச்சியாக நான்குமுறை கவுன்சிலர் பதவியில் இருந்துள்ளனர். தற்போது ஐந்தாவது முறையாக வெற்றியை எதிர்பார்த்து காங்., கட்சி களம் இறங்கி உள்ளது.

இந்நிலையில் நாகராஜூக்கு ஆதரவாக வர்த்தக காங்., மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், தேனி நகராட்சி முன்னாள் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் இன்று நாகராஜை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின்னர் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். வர்த்தக காங்., மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், 'தேனி சிவராம்நகர் 14வது வார்டில் இம்முறையும் காங்., அபார வெற்றி பெறும். தொடர்ச்சியாக ஐந்து முறை வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமையினை பெறுவோம். அந்த அளவுக்கு எங்கள் கவுன்சிலர்கள் மக்களுக்கு சேவை செய்துள்ளனர். மக்களிடம் மிகவும் நல்ல முறையில் பழகி, அவர்களையும் நல்லமுறையில் நடத்தி உள்ளனர். இதனால் மக்கள் காங்., வேட்பாளர்களை மிகவும் விரும்புகின்றனர் என்றார்.

Tags:    

Similar News