சொத்துக்காக கொலை செய்த கும்பலை சேர்ந்த 4 பேர் கைது

சொத்துக்காக தனது உறவினரை கொலை செய்து, உடலை எரித்த நான்கு பேரை பெரியகுளம் போலீசார் கைது செய்தனர்;

Update: 2022-01-22 03:45 GMT

பெரியகுளத்தில் உறவினரை கொலை செய்து எரித்த நான்கு பேர் கொண்ட கும்பலை டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளத்தில் சொத்துக்காக கொலை செய்து உடலை குப்பை கிடங்கில் எரித்த கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் எண்டப்புளி காமாட்சிபுத்தை சேர்ந்த சிங்காரவேல், ராஜம்மாள் தம்பதியரின் மகன் செந்தில்( 50.) திருமணம் ஆகாத இவர், சாமியார் வேடத்தில் ஊர் சுற்றி வந்தார். சிங்காரவேலின் 2வது மனைவி ரத்தினகிரி( 58.)  இவர்களது மகன் செல்வக்குமார்(42.) அனைவரும் ஒரே கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், செந்தில் தனது தாத்தா தன் பெயரி்ல் எழுதி வைத்த சொத்து 3.5 ஏக்கர் நிலத்தை 4 லட்சம் ரூபாய்க்கு விற்றார்.

இந்த பணத்தில் செல்வக்குமாரும், ரத்தினகிரியும் பங்கு கேட்டனர். ஆனால் பங்கு தர மறுத்த செந்தில் இவர்களை தரக்குறைவாக திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த செல்வக்குமார் அரிவாளால் செந்திலை வெட்டி கொன்றார். அதன் பின்னர் ரத்தினகிரி தனது உறவினர்கள் லோகநாதன்(32,) செல்வம்(45 )என்பவருடன் சேர்ந்து காமாட்சிபுரம் குப்பை கிடங்கில் செந்தில் உடலை போட்டு எரித்தனர். பாதிக்கும் மேல் எரிந்த நிலையில் உடலை கைப்பற்றிய பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கை விசாரித்தனர். கொலை செந்திலை கொலை செய்து உடலை எரித்த நான்கு பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News