சினிமா வசனங்களாக மாறிய ரஜினி, கமல் பட டைட்டில்கள்: விசுவின் கைவண்ணம்
ரஜினி கமல் பட டைட்டில்களை வைத்தே வசனம் எழுதிய விசு! எந்தப் படம் தெரியுமா? சொன்னா ஆச்சரியப்படுவீங்க.;
தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். ரஜினி இந்த சினிமா துறைக்கு வருவதற்கு முன்னரே கமல் ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். கமல் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்த பிறகு தான் ரஜினியின் எண்ட்ரி ஆரம்பமானது.
ஆரம்பத்தில் பல படங்களில் வில்லனாகத்தான் நடித்தார் ரஜினி. ஏன் கமல் நடித்த படங்களில் ரஜினிதான் வில்லனாக நடித்திருப்பார். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 18 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அதில் தமிழ் படங்களோடு இந்தி ,மலையாள, தெலுங்கு படங்களும் அடங்கும்.
தமிழில் அபூர்வ ராகங்கள், ஆடுபுலி ஆட்டம், மூன்று முடிச்சு, தில்லுமுல்லு, அவள் அப்படித்தான், அவர்கள், பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தப்பு தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை போன்ற படங்கள் அடங்கும்.
இந்த நிலையில் ரஜினியின் திரைப்பயணத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் தில்லுமுல்லு திரைப்படம் தான். படம் முழுக்க நகைச்சுவையோடு நடித்திருப்பார் ரஜினி. குறிப்பாக ரஜினி - தேங்கான் சீனிவாசன் இண்டர்வியூ காட்சி, இருவரும் புட்பால் போட்டி பார்க்கும் காட்சி எப்போது பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாமல் கொப்பளிக்க வைக்கும் விதமாக இருக்கும்.
இந்த படம் தந்த வெற்றியால், தனது குருநாதர் வகுத்த காமெடி பாதையையும் கெட்டியாக பிடித்துக்கொண்ட ரஜினி, தொடர்ந்து காமெடிக்கு முக்கியத்துவம் தரும் கதை, கதாபாத்திரங்களிலும் தோன்றி ரசிகர்களை மிகிழ்விக்க ஆரம்பித்தார்.
இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தேங்காய் சீனிவாசனுடன் வாதாடும் சீனில் கமல் தோன்றி நடிச்சிருப்பார்.
அதில் தேங்காய் சீனிவாசனிடம் ஜூனியர் வக்கீல்கள் எல்லாம் சூழ கமல்ஹாசன் பேசும் காட்சி அமைந்திருக்கும். அதில் தன்னை லீடிங் லாயர் சாருஹாசன் என அறிமுகப்படுத்திக் கொண்டு தன் வசனத்தை பேச தொடங்குவார் கமல்.
அந்த வசனம் முழுவதும் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த படங்களின் தலைப்பை கொண்டே வசனத்தை அமைத்திருப்பார் வசனகர்த்தா விசு. அதுமட்டுமில்லாமல் கமலின் அண்ணன் பெயரான சாருஹாசன் பெயரையே தன் பெயராக கமல் பயன்படுத்திக் கொள்வது மாதிரியும் அமைத்திருப்பார். இந்த காட்சி அப்போது மிகப்பெரும் வரவேற்பினை பெற்றது. ரஜினிக்கும் சினிமா வாழ்வில் பெரும் திருப்பம் கிடைத்தது.