கொளுத்துது கோடை வெயில் எலுமிச்சை விலையும் ‘‘விர்’’

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால், எலுமிச்சை பழத்தின் விலையும் ‘‘விர்’’ என உயர்ந்துள்ளது.;

Update: 2023-08-30 07:00 GMT

பைல் படம்

அடைமழை பெய்யும், ஆகஸ்ட் மாதத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. மலைகள் சூழ்ந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலேயே வெயில் கிட்டத்தட்ட 42 டிகிரி செல்சியஸை தாண்டி விட்டது. மதுரை, வேலுார், திருவண்ணாமலை, சென்னை பற்றி பேசவே வேண்டாம். அந்த அளவு வெயிலின் கடுமை மக்களை வாட்டி எடுத்து வருகிறது.

இந்த ஆண்டு முழுக்க வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வு அறிக்கையின் படி ஒருமுறை கூட மழை பெய்யவில்லை என்பது வேதனையான விஷயம். துாத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பனை மரம் வாடும் அளவு வெளியின் தாக்கம் அதிகம் உள்ளது. வறட்சியின் உச்சம் என்பது பனைமரம் வாடுவது தான். தமிழகத்தில் இந்த ஆண்டு பனை மரம் வாடி விட்டது என்ற செய்திகள் வெளியாகி மனதை பதறடிக்கிறது.

இந்த வெயிலின் தாக்கம் வணிகத்திலும் எதிரொலிக்கிறது. வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எலுமிச்சை பழம் விலை கிலோ 10 ரூபாய் முதல் அதிகபட்சம் 25 ரூபாய் வரை இருக்கும். இப்போது கிலோ என்பது ரூபாயினை தாண்டி விட்டது. இன்று காலை தேனி உழவர்சந்தை விலையே எண்பது ரூபாயினை தாண்டி விட்டது. வெளிமார்க்கெட்டில் கிலோ 100 ரூபாயினை எட்டி விட்டது. இந்த விலை யாரும் எதிர்பார்க்காதது தான். இதனால் எலுமிச்சை சார்ந்த ஜூஸ்களின் விலைகளும் கூடியுள்ளன என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி... எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும், சர்ம நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சள் காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும், வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும். 

எலுமிச்சம் பழம் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.

விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிட்டால் உடனடி தெம்பு ஏற்படும். உண்ணாவிரம் இருந்து முடிப்போர் மீண்டும் உண்ணும் போது எலுமிச்சை பழச்சாறு அருந்திவிட்டு உணவு உண்டால் அஜீரணப் பிரச்சனைகள் நேர்வதைத் தடுக்கலாம்.

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.

Tags:    

Similar News