கடன் வாங்கித்தருவதாக மோசடி: தொண்டு நிறுவன நிர்வாகி கைது
வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வழக்கில் தொண்டு நிறுவன பெண் நிர்வாகியை போடி போலீசார் கைது செய்தனர்;
போடியில் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், தொண்டு நிறுவன நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
போடி திருமலாபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த பெண் தலைமை நிர்வாகி ஆண்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வசூல் செய்தார். ஆனால் கடன் பெற்றுத்தரவி்ல்லை. இது பற்றி ஏமாற்றம் அடைந்த தொண்டு நிறுவன உறுப்பினர்கள் போடி டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஓராண்டாக விசாரணை நடத்தினர். பணத்தை திரும்ப தருவதாக கூறி ஒராண்டை கடத்திய அந்த பெண் நிர்வாகி பணத்தை இதுவரை தாராததால் அவர் மீது மோசடி வழக்கு பதிவு இன்று செய்து கைது செய்தனர்.