மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ரேஷன் கடை பணியாளர் தற்கொலை

கூடலூர் அருகே மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் உடைந்த ரேஷன் கடை ஊழியர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-14 03:55 GMT
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால்  ரேஷன் கடை பணியாளர் தற்கொலை
  • whatsapp icon

தேனி மாவட்டம் கூடலுார் அருகே ஆங்கூர்பாளையம் மந்தையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மதியழகன் (வயது55.).இவர் ரேஷன் கடை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராதிகா,( 48. ).இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மதியழகன் குடிப்பழக்கம் காரணமாக உடல்நலம் மிகவும் பாதித்தது. இருப்பினும் அவர் குடிப்பழக்கத்தை கை விடவில்லை. இதனால் ராதிகா தன் மகனை அழைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த மதியழகன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கூடலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News