விவசாயிகள் மத்தியில் பாரதி கிஷான் சங்கம் விழிப்புணர்வு பிரசாரம்
தேனி மாவட்ட பாரதி கிஷான் சங்க நிர்வாகிகள் விவசாயிகளுக்கு கோரிக்கைகள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸ்களை விநியோகித்தனர்.;
தேனி மாவட்ட பாரதி கிஷான் சங்க பொருப்பாளர் சதீஷ்பாபு, இணை பொறுப்பாளர் கொடியரசன் உட்பட நிர்வாகிகள் விவசாயிகளை சந்தித்து மாவட்டம் முழுவதும் நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர். இதில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு அதிகரிக்க வேண்டும். இடைத்தரகர்களின் சூழ்ச்சியில் இருந்து விவசாயிகளை முற்றிலும் பாதுகாக்க வேண்டும். விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க சட்ட வழிமுறைகளை எளிதாக்க வேண்டும்.
விவசாயத்துறையில் வேலை வாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். 1296 கோடி ரூபாயில் லோயர்கேம்ப்பில் இருந்து குழாய் வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறுத்தி, மாற்று வழிகளின் மூலம் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழர்களிடம் இருந்து கேரளா எடுத்த, பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளன.