தேனி அருகே திருடிய பணத்தை தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்: கொடூர மகன் கைது
தேனி அருகே திருடிய பணத்தை தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய கொடூர மகனை போலீசார் கைது செய்தனர்.;
தேனி அருகே உள்ள கோட்டூர் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டியராஜா,49. இவரது தந்தை தங்கமணி, 71.
இவர் தனது தந்தைக்கு தெரியாமல் அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.59 ஆயிரம் பணத்தை பொன்பாண்டியராஜா எடுத்து விட்டார். இதனை தட்டிக்கேட்ட தந்தையை கொடூரமாக தாக்கி காயப்படுத்தினார். பலத்த காயமடைந்த தந்தை தங்கமணி சின்னமனுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து தந்தை கொடுத்த புகாரின்பேரில் பொன்பாண்டியராஜாவை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.