பாதிக்கும் மேல் குறைந்தது தாக்காளி விலை: இன்று கிலோ ரூ.60 மட்டுமே
தேனி மார்க்கெட்டில் தக்காளி விலை பாதிக்கும் மேல் குறைந்து கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் தக்காளி அதிகளவு விளைச்சல் இருந்தாலும், மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் விலை அதிகரித்தது. வெளிமாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டாதால் விலை அதிகரித்து கிலோ 140 ரூபாய் வரை எட்டியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தக்காளி விலை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கிலோ 80 ரூபாயாக குறைந்தது. நேற்று 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று கிலோ 60 ரூபாயாக குறைந்தது.
இந்த விலை குறைவால் தற்போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தக்காளி விலைச்சல் இல்லாமல் தடுமாறுகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் நேரடியாக தக்காளி வாங்கி, விற்கப்படும் கமிஷன் கடைக்கே வந்து விலையை குறைக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அதிகாரிகள் தரும் நெருக்கடியால் தக்காளி மொத்த மார்க்கெட்டில் கிலோ 40 ரூபாய் ஆக குறைந்தது. சில்லரை மார்க்கெட்டில் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதர காய்கறிகளின் விலைகளும் சற்று அதிகமாகவே உள்ளன. இதனால் மக்கள் காய்கறிகள் வாங்குவதை பெருமளவு குறைத்துக் கொண்டனர். இதனால் கடந்த சில நாட்களாகவே காய்கறி வியாபாரம் டல்லடிக்கிறது என உழவர்சந்தை விவசாயிகள் தெரிவித்தனர்.