அண்ணாமலை சிரிப்பாக இல்லையா..? நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசம்

பெண்கள் மரியாதை பற்றி பேசுகிறீர்களா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்

Update: 2023-02-22 05:15 GMT

பைல் படம்

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து இடையன்காட்டுவலசு பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசுகையில், 30 திமுக அமைச்சர்களை எதிர்த்து தொண்டர்கள் களத்தில் பணியாற்றி வருகிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக வேட்பாளர் மக்களை சந்திக்கக் கூடாது என்பதற்காக, திமுகவினர் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். சீப்பை ஒழித்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுபோய்விடும் என்று பழமொழி சொல்வார்கள். ஆனால் வாக்காளர்கள் ஒழித்து வைப்பதால், அதிமுக - பாஜகவின் கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது. திமுக ஆட்சியமைத்த 22 மாதங்கள், தமிழ்நாட்டின் இருண்ட காலமாக மாறியுள்ளது. இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

திமுக 22 மாத ஆட்சியில் சம்பாதித்ததை மக்களுக்கு கொடுத்தால் வெற்றி பெறலாம் என கற்பனையுடன் வலம் வருகிறார்கள். தற்போது விசைத் தறியாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக தரப்படும் என சொல்வது வெட்கக்கேடானது. திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது கட்சிகளை அடமானம் வைத்துவிட்டார்கள். நேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வதை பார்த்துவிட்டு, அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டாரா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மக்களிடம் வாக்கு கேட்பதற்கு மு.க.ஸ்டாலினுக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ, கனிமொழிக்கோ எந்த தகுதியும் இல்லை. 

வாக்காளர்கள் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வைக்கும் மை காயும் முன்பே இளங்கோவன் சென்னைக்கு சென்று விடுவார். திமுகவின் கூட்டணி தர்மம் சந்தி சிரிக்கிறது. இளங்கோவன் ஏழை மக்களுக்கானவர் அல்ல, தென்னரசு வெற்றி பெறும் போது அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

அப்படியிருக்கும் போது தனது கட்சியில் உள்ள பெண்களை இளங்கோவன் எப்படி நடத்துவார் என்பதை விஜயதாரணியிடம் கேட்டு பாருங்கள்’’எனத் தெரிவித்து இருந்தார் அண்ணாமலை. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், '’அண்ணாமலை, இது உங்களுக்கே சிரிப்பாக இல்லை? நீங்கள் பெண்கள் மரியாதை பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் பெண்களை எப்படி குறைத்து மதிக்கிறீர்கள் என்பது தமிழ்நாடு முழுவதும் தெரியும். உங்கள் A-டீம் அதை நிரூபித்துள்ளது’’எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News