முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை

சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்வதில் பாஜக தலைவர் அண்ணாமலை வியப்பில் ஆழ்த்துகிறார்

Update: 2023-08-03 06:00 GMT

தனது வீட்டில் தொடண்டர் ஒருவரின் குழந்தைக்கு பெயர் வைத்த அண்ணாமலை.

சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்வதில் பரவசப்படுத்தும் பாஜக தலைவர் அண்ணாமலை

பொதுவாக தொண்டர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி தலைவரிடம் வேண்டினால் கடா, முடா என்று ஏதாவது ஒரு பெயர் வைத்து, சிம்பிளாக முடித்து விட்டு, போயிட்டே இருப்பாங்க.

ஆனால் பாஜக தொண்டர் ஒருவருக்கு தன் குழந்தைக்கு தலைவர் அண்ணாமலை பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆசைப்பட்டார். கட்சி பிரமுகர் ஒருவர் மூலம் கஷ்டபட்டு கோரிக்கையை அவரிடம் சேர்த்து விட, அந்தத்தொண்டருக்கு   கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சந்திக்க அப்பாயின்மெண்ட் வழங்கப்படுகிறது. அவரும் போன பத்து நிமிடத்தில் திரும்பி விட போகிறோம் என்ற எண்ணத்தில் அவர் தன் மனைவி குழந்தையுடன் அண்ணாமலை வீட்டிற்கு செல்கிறார்.

இன்ப அதிர்ச்சியாக அவரே வாசலில் நின்று வரவேற்று வீட்டினுள் அழைத்து சென்று அமர வைக்கிறார். குழந்தையின் பெயர் ராசி, நட்சத்திரம் அனைத்தையும் கவனமாக கேட்டு அதற்கேற்றவாறு "வே " என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் சூட்ட, அந்த எழுத்தில் தொடங்கும் பல பெயர்களை குழந்தையின் பெற்றோருடன் பரிசீலனை செய்து, அவர்கள் சம்மதத்துடன் வேதாந்த் என்ற பெயரை சூட்டுவது என முடிவு செய்யப்படுகிறது.

நல்ல நேரம் தொடங்க ஒரு மணி நேரம் இருக்க அது வரை வீட்டில் அவர்களை அமர வைத்து உபசரித்து நல்ல நேரம் தொடங்கியதும் இந்து முறைப்படி காதில் மூன்று முறை கூறி பெயரிட்டு, பிரார்த்தனை செய்து, ஆசிகள் வழங்கி பரிசு பொருட்களுடன் வழியனுப்பி வைக்கிறார்.

பல நாள் கனவோடு பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த ஒரு குழந்தை பெயர் சூட்டுவதில் அந்த குழந்தையின் பெற்றோருக்கு நிறையவே எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் அதையும் தாண்டி தான் விரும்பும் தலைவர் தன் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று ஆசைப்படுவாயாயின் அவர் மீது எவ்வளவு பற்றும் நம்பிக்கையும் கொண்டிப்பார்கள் அந்த பெற்றோர்.

அந்த நம்பிக்கையை, எதிர்பார்ப்பு மற்றும் ஆசையை நிறைவேற்றும் மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்து செயல்படுவதுதானே நல்ல தலைவருக்கு அழகு. தன் பொறுப்பை உணர்ந்து அன்பும் அக்கறையுமாக பெற்றவர்கள் சம்மதத்துடன் பெயர் தேர்வு செய்து, சரியான நேரத்தில் பெயர் சூட்டி, ஏறதாழ ஒரு வைபவமாகவே நடத்தி விட்ட அண்ணாமலை நிஜமாகவே பாராட்டிற்கு உரியவர்.

இரண்டு நிமிடத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப , ஏதோ வாயில் வந்ததை சூட்டி பெற்றவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் தலைவர்களிடையே ஒரு சாதாரண பெயரிடும் விஷயத்தை கூட நிதானமும் அக்கறையுமாக பக்குவமாக செய்கிறார் தலைவர் அண்ணாமலை  என்று பாஜக வினர் கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News