ஆலயமணி திரைப்படம்... இந்த காட்சியை கவனிச்சீங்களா?...

1962-ம் ஆண்டு, நவம்பர் 23-ம் தேதி வெளியானது. பி.எஸ்.வீரப்பா தயாரித்த ‘ஆலயமணி’ திரைப்படம்.

Update: 2023-06-20 05:30 GMT

பைல் படம்

மிகப்பெரிய வரவேற்பையும் சிவாஜி சரோஜாதேவி கூட்டணி வெற்றியையும் உறுதி செய்தது. சிவாஜி கணேசன் சரோஜாதேவியின் நடிப்பு பேசப்பட்டது. எஸ்.எஸ்.ஆர் சிறப்பாக நடித்திருந்தார். எம்.ஆர்.ராதா வழக்கமான சேட்டைகளையும் லொள்ளுகளையும் செய்து வில்லத்தனம் பண்ணியிருந்தார்.

ஜாவர் சீதாராமன் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் எல்லாப் பாடல்களையும் எழுதினார். எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இன்றைக்கும் எல்லோராலும் முணுமுணுக்கும் பாடல்களாக அமைந்திருக்கின்றன. படத்தில் வசனங்கள் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

ஒரு காட்சியில் வேலைக்காரர்கள் இருபக்கமும் வரிசையாக நிற்க, சிவாஜி மிக ஸ்டைலாக நடந்துவருவார். அப்போது, வேலைக்காரர்களில் ஒருவர், இன்னொருவரிடம், ‘நம்ம முதலாளி நடையைப் பாத்தியாடா. என்ன ஸ்டைல்டா’ என்பார். சிவாஜி திரும்பிப் பார்த்து விட்டு, ஸ்டைலாகச் சிரித்தபடி நடப்பார்.

பிறகு கால்கள் செயலிழந்த நிலையில், வீல்சேரில் வருவார் சிவாஜி. அந்த வேலைக்காரரிடம், ‘உன் முதலாளி நடையழகைப் பாத்தியாடா’ என்று பரிதாபத்துடன் கேட்பார். வேலைக்காரர்களுடன் சேர்ந்து நாமும் அழுவோம். இப்படி சிவாஜியின் நடிப்பின் சிறப்பை வெளிப்படுத்தும் பல காட்சிகள் இப்படத்தில் உள்ளன. படம் வெளியாகி 60 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இன்னும் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ என்று வீல்சேரில் செல்லும் சிவாஜிக்குப் பின்னே நடந்து கொண்டு தான் இருக்கிறோம்.‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ என்று பாடிக்கொண்டு தான் இருக்கிறோம். ‘சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ என்ற கண்ணதாசனின் ஜீவ வரிகளைக் கேட்டு வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயன்று கொண்டே தான் இருக்கிறோம்.

Tags:    

Similar News