நெல் பயிரில் புகையான் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

தேனி மாவட்டத்தில் நெல் பயிரில் புகையான் பூச்சிகளின் தாக்குதல் இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தேனி வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-12-09 03:07 GMT

நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் - கோப்புப்படம் 

நெற்பயிரில் புகையான் தாக்குதல் நோய் அறிகுறிகள்:

  • தீய்ந்தது போல் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகவும் முற்றிலும் காய்ந்தும் காணப்படும்,
  • முதிர்ச்சி அடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமாக திட்டுகளாக காணப்படும். மேலும் பயிர்கள் சாய்ந்து விடும்.
  • நீா் மட்டத்திற்கு மேல் இருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.
  • தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து தீய்ந்த மாதிரி காட்சி அளிக்கும்.


இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதிய இடைவெளி இல்லாமல் நடவு செய்தல், நிழல், அதிக நீர் தேங்குதல், அதிகளவில் உரமிடுதல், பூச்சி மருந்துகள் தெளித்தல், பயிருக்கு நன்மை தரும் பூச்சிகள் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்களால் புகையான் பூச்சிகளின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இந்த பூச்சிகள் நெல் பயிரின் வேர் பகுதியை தாக்கி சாற்றை உறிஞ்சி பயிருக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் செய்து விடும்.

சிலந்தி, பொறிவண்டு, நீர் தாண்டி, மிரிட் நாவாப்பூச்சி, தட்டான் மற்றும் ஊசித்தட்டான், புகையானின் குஞ்சுகள் பூச்சிகளை உண்பதால், புகையான் பூச்சிகள் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும். புகையான் பூச்சிகள் தாக்கிய வயல்களில் நீரை நான்கு நாட்களுக்கு வடித்து விட வேண்டும். 3 சதவீத வேப்ப எண்ணெய் கரைசலை தெளித்து இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். அல்லது தையாமெத்தாக்சாம் 40 கிராம், இமிடாகுளோபிரிட் 17.8 சதவீதம், டைகுளோர்வார்ஸ் 75 சதவீதம், புப்ரோபெசின் 25 சதவீதம், இவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை உபயோகித்து ஒரு ஏக்கர் பரப்பில் தெளிப்பதன் மூலம் புகையான் பூச்சியை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News