தேனி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தேனி அருகே இரண்டாம் திருமணம் செய்த வாலிபர் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 34.) இவருக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜ் குடித்து விட்டு ஊர் சுற்றியதால், மனைவி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கோவிந்தராஜ் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார்.இது குறித்து கோவிந்தராஜின் மனைவி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவிந்தராஜையும், அவரது இரண்டாவது மனைவியையும் விசாரித்தனர். இதனால் மனம் உடைந்த கோவிந்தராஜ் போலீசில் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.