கம்பம் அருகே மாமனாரால் எரிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

கம்பம் அருகே வரதட்சணை கொடுமையால் மாமனாரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலன இன்றி உயிரிழந்தார்.;

Update: 2022-05-25 07:42 GMT

கம்பம் நாராயணதேவன்பட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி, (வயது22.) இவர் அதே ஊரை சேர்ந்த சுகப்பிரியாவை காதலித்து திருமணம் செய்தார். யோகேஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அருண்பாண்டி வீட்டில் வரதட்சணை கேட்டு சுகப்பிரியாவை கொடுமைப்படுத்தினர். மாமனார் பெரியகருப்பன், கடந்த மே 16ம் தேதி சுகப்பிரியா மீதும், பேரன் யோகேஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். பலத்த காயமடைந்த யோகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சுகப்பிரியா, நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். ராயப்பன்பட்டி போலீசார் பெரியகருப்பன், அருண்பாண்டியை கைது செய்தனர்.

Tags:    

Similar News