குமுறலில் அதிமுக.. குழப்பத்தில் எடப்பாடி..
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டு கட்சியை வளர்க்க மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.;
மாநிலம் தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டு பாஜகவை வளர்க்க மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். இந்தப் பயணத்தின்போது மக்களிடம் குறைகளை கேட்கும் அவர், இதற்கெல்லாம் இப்போதும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களே காரணம், பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் இவற்றையெல்லாம் மாற்றிக் காட்டுவேன் என கூறி வருகிறார்.
கட்சி வளர்ச்சிக்காக மக்களிடம் இதையெல்லாம் எல்லாக் கட்சிகளும் சொல்வார்கள் என்று அசால்டாக அதிமுக இருந்த சமயத்தில் திமுகவுக்கு நிகராக அதிமுகவையும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. இதுதான் அதிமுகவுக்கு பெரும் சங்கடத்தையும், குமுறலையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திமுகவை மட்டும் நேரடியாக விமர்சித்துவிட்டு, அதிமுகவை இலைமறை காயாக மறைமுகமாக இதுவரை பேசி வந்த அண்ணாமலை கடந்த சில தினங்களாக சி.வி.சண்முகம் ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டே விமர்சித்து வருகிறார்.
அண்ணாமலையின் விமர்சனங்கள் அதிமுகவுக்குள் மிகப்பெரிய கலகத்தை ஏற்படுத்தியிருப் பதால், பாஜக உடனான கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் அதிமுக மூத்த தலைவர்கள் இருக்க, என்ன முடிவெடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.